Wednesday, February 5, 2025

சூலூரில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இன்று, சூலூர் காவல் நிலைய பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன் அவர்களின் உத்தரவின்படி, போதைப்பொருள் விற்பனை குறித்த ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து சூலூர் காவல்துறையினர் நீலாம்பூர் பகுதியில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் (40) மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (39) ஆகிய இருவரும் கஞ்சாவுடன் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதுகுறித்து பேசிய காவல் கண்காணிப்பாளர், போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொதுமக்கள் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest news