Thursday, February 6, 2025

நாம் தமிழர் கட்சியோடு போட்டியிடுவது காலக்கொடுமை – வி.சி‌.சந்திரக்குமார் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வி.சி‌.சந்திரக்குமார் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்டி மனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியதாவது : முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாசியுடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். வாழ்த்துகளுடன் அமைச்சர் முத்துசாமியின் வழிகாட்டுதலுடன் போட்டியிடுகிறேன்.

இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவெரா திருமகன் ஈவெரா இயற்கை எய்தினார். பின்னர் அவரது தந்தை ஈ.விகேஎஸ் இளங்கோவன் மறைவுற்றார். எனவே தான் இந்த இடைத்தேர்தல் வந்திருக்கக் கூடாத தேர்தல்.

இந்த தொகுதி 5 ஆண்டு காலம் எட்டும் முன்னே ஒன்னேகால் வருடம் உள்ள நிலையில் தேர்தலில் போட்டிட்டுள்ளேன். உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த வெற்றி இருக்கும். நிச்சயமாக மிகப் பெரிய வெற்றி.

பிரச்சாரத்திற்கு செல்லும் போது மக்கள் 100 % மட்டுமில்ல 200% வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என மக்களே கூறுகிறார்கள். ஈரோட்டிற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ? அதை செய்வோம் என கூறினார்.

நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது குறித்து கேட்ட போது :

பொய்யும் புரட்டும் பேசும் வியாதி உள்ளவர். நாம் தமிழர் கட்சியுடன் போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாக உள்ளது என அவர் கூறினார்.

Latest news