மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஹரியானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ”சர்தார் வல்லபபாய் படேல் அல்லது அம்பேத்கர் தான் நாட்டின் முதல் பிரதமராக பதவி ஏற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு தான் அந்த தகுதி இருந்தது. நேரு பிரதமர் ஆனதே விபத்து தான்,” என பேசியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, ”தற்செயலாக அமைச்சர் ஆனவரெல்லாம் இந்த விமர்சனத்தை முன்வைக்க கூடாது,” என்றார்.