Thursday, February 6, 2025

‘இவன்தான் அந்த சார்’…அதிமுகவை நோஸ் கட் செய்த திமுக..!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரை தவிர்த்து மற்றொரு சார் தொடர்பில் இருப்பதாகவும், அந்த சார் யார் என கண்டறிய வேண்டும் என்று அதிமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.இதனை தொடர்ந்து சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில்.. யார் அந்த சார் பேட்ஜுடன் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே அண்ணா நகரில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக பிரமுகர் சுதாகர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சுதாகரின் புகைப்படத்தை காட்டி, ’இவன் தான் அந்த சார்’ என்ற வாசகத்துடன் துண்டு சீட்டு கொடுத்து திமுகவினர் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Latest news