நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் மற்றும் திராவிடம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : பெரியாரின் கொள்கைகளே தமிழ்நாட்டை இன்று வழிநடத்துவதால் பெரியார் மண் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கும் இழிவான, மலிவான அரசியல் பேர்வழிகளை புறக்கணிப்போம்.
யாருக்கோ ஏஜெண்டாக சில தற்குறிகள் இங்கே அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மானமும் அறிவும் இருப்போர் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள். தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க நினைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என அவர் கூறியுள்ளார்.