சீனாவில் உள்ள கிங்காய் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இரு தினங்களுக்கு முன்பு நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது சீனாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.