பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் உடனான ஒப்பந்த நடைமுறை “2025-35” என்ற தலைப்பிடப்பட்ட முன்னெடுப்பின் கீழ், முதல்முறையாக 10 ஆண்டுகால ஒப்பந்த நடைமுறையை அறிமுகப்படுத்த உலக வங்கி முடிவு செய்துள்ளது.
இதன்படி 1.70 லட்சம் கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடனாக வழங்கவுள்ளது. இதில், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 500 கோடி ரூபாயை உலக வங்கியின் கிளைப் பிரிவுகளான சா்வதேச மேம்பாட்டுக் கழகமும், 51 ஆயிரத்து 500 கோடி ரூபாயை புனரமைப்பு மற்றும் வளா்ச்சிக்கான சா்வதேச வங்கியும் வழங்கவுள்ளன.