Wednesday, February 5, 2025

‘நீ என்ன எருமை மாடா’…உதவியாளரை வசைபாடிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தஞ்சாவூரில் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

அனைவருக்கும் வணக்கம் என தனது உரையை தொடங்கிய அவர் திடீரென தனது உதவியாளரை பார்த்து நீ என்ன எருமை மாடா? பேப்பர் எங்கே? என கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அமைச்சர் தனது உதவியாளரை ஒருமையில் பேசியது, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Latest news