Tuesday, April 22, 2025

அனைத்து துறைகளிலும் தமிழக பெண்கள்தான் டாப் – மு.க ஸ்டாலின் பெருமிதம்

தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த பெண்களுக்கும் புதுமைப் பெண் திட்டத்தின் மூல்ம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

இதையடுத்து மேடையில் பேசியதாவது : புதுமை பெண் திட்டம் திமுக வாக்குறுதியில் சொல்லாத திட்டம். பாரதி கண்ட கனவை புதுமை பெண் திட்டத்தின் மூலம் திராவிட மாடல் அரசு நிரவேற்றி உள்ளது.

இந்தியாவில் தமிழக பெண்கள்தான் உயர்கல்வியில் முன்னிலையில் உள்ளார்கள். உயர்கல்வி பயிலாத பெண்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டோம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அனைத்தும் செய்து தர நான் இருக்குறேன் என அவர் பேசியுள்ளார்.

Latest news