உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் தினம், உலக அளவில் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டிற்காக ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடினர்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயங்களில், புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனைகளில் மக்கள் கலந்துகொண்டனர். ஐரோப்பிய, அமேரிக்க நாடுகள் மட்டுமின்றி பல்வேறு தேசங்களில் நேற்று இரவு தொடங்கி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.
உலக அமைதி, மகிழ்ச்சி, அன்பு, சகோதரத்துவம் வேண்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.