ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 20ம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.