Wednesday, February 5, 2025

தந்தை பெரியாரின் படத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் மரியாதை

தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய் பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர்  எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்.” என பதிவிட்டுள்ளார்.

Latest news