Sunday, July 20, 2025

ஹிமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகள் அவதி

ஹிமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத அளவில் பனிப்பொழிவு நிலவுவதால் 700 சுற்றுலா பயணிகள் சிக்கித்தவித்தனர். நேற்றைய தினம் அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது.

கடும் பனிப்பொழிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இதில் மாட்டிக்கொண்ட சுற்றுலா பயணிகள் 700 பேர் மீட்கப்பட்டனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஹிமாச்சல பிரதேசத்தில் குவிந்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news