தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 880 ரூபாய் குறைந்துள்ளது
நேற்று (19.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.65 குறைந்து 7,070 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 7,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.