திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க 290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம், அறிவுசார் மையம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
கலைஞர் நூலகம் அமைக்க திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் அருகே 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரை மற்றும் 7 தளங்கள் கொண்டதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கலைஞர் நூலகம் அமைக்க 290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.