இந்தியாவை சேர்ந்த குகேஷ், செஸ் உலகில் இளம் சாம்பியன் ஆகி புதிய சாதனை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச போட்டிகளில் விளையாடி உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அவருக்குப் பிறகு, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
இளம் வயதில் மகத்தான சாதனையை நிகழ்த்தி, ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம்குளிர வைத்துள்ள குகேஷுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று சென்னை திரும்பிய குகேஷ்க்கு விளையாட்டுத்துறை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை மாலை 6 மணிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.