தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்ய அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி உள்ளிட்ட 5 கட்சிகள் இணைந்து மீண்டும் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்தன.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 204 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 85 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்படி, தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, அதிபர் பதவிநீக்கம் செய்யப்பட்டால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் வழிமுறையாகும் . தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அவசர நிலையை தென்கொரிய அதிபர் வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து அதிபர் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் எதிர்க்கட்சிகளால் 2 வது முறையாக கொண்டுவரப்பட்டது.