ஹாங்காங்கில் பேசும் குப்பை தொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த குப்பை தொட்டி மக்களிடம் சென்று “நான் குப்பையை சாப்பிட விரும்பறேன்” என்று பேசுமாம். குப்பையை போட்டவுடன் “ஆ, என்ன சுவையாக இருக்கிறது” என குப்பைத் தொட்டி மகிழ்ச்சியுடன் பதில் அளிப்பதாக கூறுகின்றனர்.
குப்பையை அகற்றுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட இந்த பேசும் குப்பை தொட்டி பலருக்கு பொழுதுபோக்கு சின்னமாகவும் மாறியுள்ளது.