சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. நகரத்தின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 500 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருநெல்வேலி டவுன் அருகே உள்ள காட்சி மண்டபம் சாலை முழுவதும் மழைநீரில் முழ்கியது.
திருநெல்வேலி டவுனில் பெய்த கனமழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம், முகமது அலி தெரு, கே.டி.சி., நகர் கீழநத்தம் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.