உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக எலான் மஸ்க் முதல் இடத்தில உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு பிறகு எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.
டொனால்டு ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மாஸ்க் பிரசாரம் செய்தார். அவருக்கு ட்ரம்ப் அலுவலத்தில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு ரூ. 29 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ. 33 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இது அமெரிக்க மதிப்பில் சுமார் 400 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. எலான் மஸ்க்கின் சொத்து உலக வரலாற்றில் இதுவரை யாரும் தொடாத அளவுக்கு உயர்ந்துள்ளது.