சென்னையில் முந்தைய ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கார் உரிமையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் சமீப காலமாக, அதி கனமழை என்ற அறிவிப்பு வந்தவுடன் மேம்பாலங்களில் கார்களை பார்க்கிங் செய்து பாதுகாத்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து மழை நீரில் இருந்து வாகனத்தை பாதுகாத்துக்கொள்ள மேம்பாலங்களில் வாகனத்தை பார்க்கிங் செய்து வருகின்றனர்.
வேளச்சேரி மேம்பாலத்தில் ஏரளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் ராயபுரம் மேம்பாலத்திலும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.