Wednesday, February 5, 2025

பணம் பறிக்க புது ட்ரிக்…இந்த நம்பரிலிருந்து போன் வந்தால் உஷாரா இருங்க

மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசடி செய்பவர்கள், சந்தேகத்தை ஏற்படுத்தாமல் மக்களை ஏமாற்றுவதற்காக +67 மற்றும் +670 போன்ற சர்வதேச எண்களைப் பயன்படுத்தி உங்களை தொடர்பு கொள்கிறார்கள்.

இந்த வகையான அழைப்புகள் உங்களுக்கு வந்தால், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மோசடிகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கீழே காணலாம்.

தெரியாத நம்பரில் இருந்து அல்லது சர்வதேச எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால், பதில் அளிக்காமல் இருக்க வேண்டும்.

எந்த அரசாங்க அதிகாரியும் நேரடியாக உங்களுடன் தொடர்பு கொண்டு பேச மாட்டார்கள். எனவே, அரசு அதிகாரி எனக் கூறி யாராவது உங்களை அணுகினால், கவனமாக இருக்க வேண்டும்.

லிங்குகளை கிளிக் செய்யுமாறு கேட்டால், அவற்றை தவிர்க்கவும். இவை ஃபிஷிங் லிங்குகள் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், உங்கள் அனைத்து தகவல்களையும் பயன்படுத்தி, உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து விடலாம்.

இது போன்ற மோசடிகளைத் தடுக்க, எச்சரிக்கையுடன் இருங்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

Latest news