வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை 12 மணி நேரத்தில் வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை தென் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கூறியுள்ளது.