Friday, April 11, 2025

வானில் வட்டமடிக்கும் விமானங்கள்…சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் விமானங்கள் 20 நிமிடங்கள் வரை தாமதமாக வருகிறது. விமானங்கள் சிறிதுநேரம் வானில் வட்டமடித்து பின் தரையிறக்கப்பட்டுள்ளது.

வெளிநகரங்களுக்கு புறப்படும் 15 உள்நாட்டு விமானங்களின் சேவையும் தாமதமாகியுள்ளது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Latest news