வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று இரவு முதல் லேசான மழை பெய்ய துவங்கியுள்ளது. இன்று காலை முதல் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
கனமழை காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரையாண்டு தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பிறகு அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வி அறிவித்துள்ளது.