Sunday, July 6, 2025

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்து சேதம்

திருப்பூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் கார் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்தது.

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள அமர்ஜோதி கார்டன் பகுதி குடியிருப்பில் வருபவர் விக்னேஷ். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலக்ட்ரிக் கார் வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை விக்னேஷின் அண்ணன் வினோத் காரை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு சென்று மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் காரின் முன் பக்க பேட்டரி தீப்பிடித்து எரிய துவங்கி, பின்னர் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news