பெரம்பலூர் அருகே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூரில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற மூன்று இளைஞர்கள் மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேய ஒருவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றிய நிலையில் காயமடைந்த 2 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையில் பைக்கில் சென்ற 3 பேரும் மத்திய பிரதேசத்தை சேந்த நபர்கள் என தெரியவந்தது.