Thursday, January 15, 2026

வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே, தனியார் பள்ளி மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது இளைய மகள் ஈஷா அத்விதா, தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாள்.

இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற ஈஷா அத்விதா, வகுப்பறையில் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மாணவிக்கு உடனே முதலுதவி அளித்த பள்ளி நிர்வாகத்தினர், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News