Friday, December 27, 2024

பும்ரா சிறப்பாக செயல்பட நான் தான் காரணம் – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத்

பும்ரா சிறப்பாக செயல்பட தான் கொடுத்த ஆலோசனை முக்கிய காரணம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் பும்ரா சிறப்பாக செயல்பட, தான் கொடுத்த ஆலோசனை தான் முக்கிய காரணம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மெக்ராத் கூறியுள்ளார்.

கிரீஸ்க்குள் நேராக சென்று வீசினால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தேன். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. பின்னர் கடினமான பயிற்சியை மீண்டும் செய்தார் என கூறினார். பந்துக்கு பின்னே தன்னுடைய கையை வைத்து வீசுவதால் அவரின் பந்து, ஸ்டம்புகளை நோக்கி செல்கிறது. அது கண்டிப்பாக பெரிய உதவியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Latest news