தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. இது ஆழ்ந்த தாழ்வு பகுதியாக 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும், நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.