ஆதார் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு! முக்கிய தகவல்…

632
Advertisement

நமது அன்றாட வாழ்வில் அடிப்படையான விஷயங்களில் ஒன்று ஆதார் கார்டு. ஆதார் கார்டு என்பது இந்தியர்களின் தனிப்பட்ட அடையாள ஆவணம் ஆகும். தகுதியுள்ள நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் ஆதார் மூலமாக வழங்கப்படுகின்றன.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் அந்த அடையாளத்தைப் பயன்படுத்தலாம். அவர்கள் இருக்கும் ஊரிலோ அல்லது மாநிலத்திலோ மட்டும்தான் செல்லுபடியாகும் என்றல்ல. இந்தியா முழுவதும் அது அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

கடந்த 10, 11 ஆண்டுகளாக ஆதார் கார்டை புதுப்பிக்காதவர்கள, வீடு மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.

இதற்கு மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்பாடு செய்தது.

UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் வசதிக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது.

myAadhaar பக்கம் மூலம் எளிதாக மாற்றங்களை மாற்றும் வசதி இருந்தது.

uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVCமூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம்  புதுப்பிக்க முடியும்.

இந்நிலையில் தான் ஆதார் அட்டைகளை பதிவு செய்வது மற்றும் மாற்றங்களை செய்வதில் புதிய நடைமுறைகளை ஆதார் அமைப்பு கொண்டுவந்துள்ளது.

கைரேகைகள் கிடைக்காத அல்லது இல்லாத பட்சத்தில் கண்களின் ஐரிஸ் ஸ்கேன் மூலம் ஆதார் பெற பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாற்று திறனாளர்கள், கைகள் இல்லாதவர்கள், விரல் ரேகை வைப்பதில் சிக்கல் உள்ளவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி ஆதார் விவரங்களை பெறலாம் என்று ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.