தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய்க்கும் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சிக்கும் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.
விஜயை தன்னுடைய பல படங்களில் நடிக்க வைத்ததும் இல்லாமல், ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி அரசியல் களத்துக்கும் அடிப்படை அமைத்துக் கொடுத்தவர் எஸ்.ஏ.சி.. விஜய்க்கும் அவரது தந்தைக்கும் மோதல் போக்கு தொடங்கிய நிகழ்வு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
‘தலைவா’பட ரிலீசின் போது Time To Lead என டைட்டிலுடன் இணைக்கப்பட்ட வாசகம், அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை கிளப்பி வலுவான சிக்கல்களை கொண்டு வந்தது. அதை தீர்க்க கொடநாடு சென்ற விஜயையும் அவரது தந்தையையும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பார்க்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பிறகு விஜய் மன்னிப்பு கேட்கும் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவமானப்பட்ட பிறகு மன்னிப்பும் ஏன் கேட்க வேண்டும் என எஸ்.ஏ.சி அந்த வீடியோவை போட வேண்டாம் என வலியுறுத்தியும் விஜய் கேட்காததே விஜய்க்கும் அவரது தந்தைக்குமான மோதல் போக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.