Saturday, December 21, 2024

காதலியை கொன்று கழிவு நீர்த் தொட்டியில் வீசிய கோவில் அர்ச்சகர்! வெளியான பகீர் தகவல்.

இந்தியாவில் திருமணமான அர்ச்சகர் காதலியை கொலை செய்து நீர் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 36 வயதான சாய் கிருஷ்ணா, கோவிலில் அர்ச்சகராக உள்ளார்
இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அப்சரா என்ற பெண்ணுடன் சாய் கிருஷ்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் தனிமையில் சந்தித்த நிலையில் அப்சரா கர்ப்பமானார்.

இந்நிலையில், சாய் கிருஷ்ணாவின் கட்டாயத்தின் பேரில் அப்சரா கர்ப்பத்தை கலைத்துள்ளார்.சாய் கிருஷ்ணா தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த அப்சரா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் இருவருக்கும் இது தொடர்பாக சண்டை ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த சாய் கிருஷ்ணா அப்சராவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை கழிவு நீர்த் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், மகளை காணவில்லை என்று பொலிஸில் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகார் கொடுக்கும் போது சாய் கிருஷ்ணாவும் உடனிருந்தனர்.

சந்தேகத்தின் பேரில் போலீசார் சாய் கிருஷ்ணாவை விசாரித்ததில் அவர் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அப்சரா உடலையும் கைப்பற்றினர்.

Latest news