தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் அனைவரும் வேளை வேளை என்று கடிகாரம் சுழலுவதை போல சுழன்றுகொண்டிருக்கின்றோம் இந்நிலையில் தான் வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகள்,”bachelors” சத்தத்தை வடித்து சாப்பிட சோம்பேறி படுபவர்கள் போன்றோர் காலையில் பிரஷர் குக்கரில் தான் சத்தத்தை வடிக்கிறார்கள் அப்படி தொடர்ந்து சாப்பிடுவது ஆபத்து என்றாலும் அதை தான் செய்கின்றோம்.
இல்லத்தரசிகள் பிரஷர் ஏறாமல் இருப்பதற்கு பிரஷர் குக்கர் உதவியாக இருக்கின்றது இப்படி பட்ட இந்த பிரஷர் குக்கரை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
பிரஷர் குக்கரில் உணவு சமைக்கும்பொழுது 90 ரிலிருந்து 95% ஊட்டச்சத்து வீணாகாமல் அப்படியே கிடைப்பதாக இத்தாலியில் உள்ள Journal of food science என்னும் நிறுவனம் வெளியிட்ட ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது.
குக்கர் அலுமினியம், காப்பர், எஸ்.எஸ்.ஸ்டீல், டைட்டானியம் என பல வகையில் இருக்கின்றது இதில் அலுமினியம் குக்கரை மட்டும் பயன்படுத்த வேண்டுமென செய்திகள் வெளியாகி உள்ளன.
உணவு சமைத்து முடித்த பிறகு குக்கரின் விசிலில் இருக்கும் துவாரங்களை நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.சமையல் முடிந்த பின்பு, குக்கரில் சமைத்த உணவை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு சுத்தமாக கழுவி உலர வைக்க வேண்டும். வெயிலில் 10 நிமிடம் வரை உலர வைப்பது சிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குக்க்கரில் சமைக்கும் உணவு பாதி அல்லது அதற்க்கு முக்கால வரை இருக்கவேண்டும் குக்கரை மூடும் போதே ‘விசில்’ போடக்கூடாது. நீராவி நன்றாக வெளிவர ஆரம்பித்த பிறகே அதில் விசிலைப் பொருத்த வேண்டும். இதன் மூலம் குக்கர் சீராக இயங்குவதோடு நீண்ட நாள் உழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.