Monday, December 29, 2025

இன்று சர்வதேச சமுத்திர தினம்..!

இன்று சர்வதேச சமுத்திர தினமாகும்.

சமுத்திர சுழலின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 8 ஆம் தேதி உலக சமுத்திர தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

”மாற்றமடையும் புவியின் சமுத்திரங்கள்” என்பதே இவ்வருட சமுத்திர தின தொனிப்பொருளாகும்.பூமிக்கு தேவையான 50 வீத ஒட்சிசனை சமுத்திரங்களே உற்பத்தி செய்கின்றன.

சமுத்திரங்கள், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான புரத உணவுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.இத்துணை வளங்களை எமக்கு அள்ளி வழங்கும் சமுத்திரம் இன்று, ஆபத்தான நிலையில் இருப்பது வேதனைக்குரிய விடயம்.

பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் சமுத்திரமும், சமுத்திரத்தில் வாழும் உயிரினங்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன.
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 8.8 மில்லியன் தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் சமுத்திரங்களில் விடுவிக்கப்படுகின்றன.

எமது சமுத்திரத்தைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும் என்பதனை சர்வதேச சமுத்திர தினத்தினாவது நினைவு கூறுவோம்.

Related News

Latest News