இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களைக் கொண்டுள்ளது. அதிசயமான கண்கவர் உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹம்மிங் பறவைகள். இவை மிக அழகான வண்ணங்களைக் கொண்டவை. இது மட்டுமின்றி பல்வேறு கோணங்களில் பார்க்கும் போது அதன் நிறம் மாறுவது போல் தோன்றும், ஹம்மிங் பறவை ஒன்று தனது தலையை உயர்த்தி, இசையாய் குறட்டை விடுவதைக் காணலாம். இது பார்ப்பவரை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது . அந்த குறட்டையே இளையராஜாவின் இசை போல் இனிக்கிறது என்றால் மிகையில்லை.
ஹம்மிங் பறவைகள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. மனதைக் கொள்ளும் கியூட்டான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது