Sunday, December 22, 2024

ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைன்தாக்குதல்!!அதிர்ச்சி காணொலி…

இது முடிவுக்கு வந்துவிடாதா என அனைவரும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நினைத்த ஒன்று என்னவென்றால் ரஷ்யா உக்ரைன் போர்,

அந்த அளவிற்கு ரஷ்யா உக்ரைன் இடையே அந்த போர் தீவிரமாக நடந்தது இப்பொழுதும் தீவிரமாக நடந்துகொண்டு தான் இருக்கின்றது.

கடந்த வருடம் பெப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கிய இந்த ரஷ்யா உக்ரைன் போரானது 16 மாதங்களாக தொடர்கிறது ,ரஷ்ய படைகள் உக்ரைனின் சில இடங்களை பிடித்து வைத்து இருக்கும் நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையில் உக்ரைனிய ஆயுதப் படை எதிர் தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் சமீபத்தில் தலைநகர் கீவ் மற்றும் உக்ரைனிய நகரங்கள் மீது தொடர்ந்து 3 நாட்கள் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக இணையத்தில் காணொளிகள் வைராகிக்கொண்டிருக்கின்றன.

அத்துடன் எதிர்களின் அத்துமீறிய ஊடுருவல் முயற்சியை ரஷ்ய ராணுவம் தடுத்து இருப்பதாகவும், இதில் 50 பேர் வரை கொல்லப்பட்டதாகவும்  சொல்லப்படுகிறது ,மேலும் எதிரிகளை விரட்ட ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் காட்சிகளையும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news