பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 16வது சீசன் IPL தொடரின் இறுதிப்போட்டி, குஜராத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இடையிடையே மழை குறுக்கிட்ட போதும், DLS முறையில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை தோற்கடித்தது. நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள sub-surface drainage system மழை பெய்து அரை மணி நேரத்திற்குள்ளாக 75 மில்லிமீட்டர் தண்ணீரை வடிய உதவுகிறது.
எனினும், அதிகப்படியான நீரை உறிஞ்ச சூப்பர் சாப்பர் போன்ற ரோலர்ஸ் பயன்படுத்தப் படுகிறது. மேலும், மழையில் நனைந்தபடி ஊழியர்கள் கவர்களை பிடிப்பது, ஸ்பான்ஜ் பக்கெட் மட்டுமில்லாமல் hair dryerகளை வைத்து மைதானத்தை உலர வைக்கும் நடைமுறை உள்ளது.
IPL போட்டிகளுக்கு இடையே இப்படியான செயல்களின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வர, கோடிகளில் சம்பாதிக்கும் BCCI உரிய எந்திரங்களை வாங்க முடியாதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இங்கிலாந்து போன்ற நாடுகள் நவீன எந்திரங்களை பயன்படுத்தும் போது, இந்தியா இந்த நிலையில் இருப்பது கவலையளிப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு லட்சத்து முப்பத்தி ரெண்டாயிரம் பார்வையாளர்களை அமர வைக்கும் வசதி கொண்ட நரேந்திர மோடி ஸ்டேடியம் உலகத்திலேயே பெரிய ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது.