துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது..!

223
Advertisement

துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு அதிபராக பதவி ஏற்றார்.

அதுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் ஆட்சி செய்து வரும் நிலையில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த 15-ந் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில், எர்டோகன் தரப்பிலும்,  எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் தரப்பினரும் பெரும்பான்மை பெறாததால் 2-வது சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது சுற்றாக நடந்த தேர்தலில், எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை வென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் உறுதியான முடிவு வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.