Sunday, December 28, 2025

லண்டனில் கருப்பின சிறுமி இளவரசி கேட் மிடில்டனை புறக்கணித்தாரா? புகைப்பட சர்ச்சைக்கு பதிலடி

அரச குடும்ப ஆதரவாளர்கள் பலரும் பிரவுனுக்கு பதிலடி கொடுத்து திட்டி தீர்த்தனர்.

அமெரிக்க நடிகையும் தொகுப்பாளினியுமான யெவெட் நிக்கோல் பிரவுன் சமூக ஊடகங்களில் கேட் மிடில்டனை குறிவைத்து வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பிரவுன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் கருப்பின சிறுமி ஒருவரை சந்திக்கிறார்.அந்த பதிவில் பிரவுன், அந்த கருப்பின சிறுமி கேட் மிடில்டனைச் சந்திப்பதில் தனக்கு விருப்பமில்லை என்ற உணர்வை முகத்தில் காட்டுவதோடு அவரை புறக்கணித்தார் என குறிப்பிட்டார்.

இந்த புகைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு எவெலினா லண்டன் குழந்தைகள் மருத்துவமனைக்கு கேட் மிடில்டன் வருகை புரிந்த போது எடுக்கப்பட்டதாகும்.ஆனால் குறித்த சிறுமி கேட் மிடில்டனிடம் அன்பாக பேசுவது, வேறு புகைப்படங்களை பார்க்கும் போது தெரிகிறது.

இதையடுத்து அரச குடும்ப ஆதரவாளர்கள் பலரும் பிரவுனுக்கு பதிலடி கொடுத்து திட்டி தீர்த்தனர்.இனவெறி, கோபம் கொண்ட பிரவுன் சிறுமியின் புகைப்படத்தை அவளது வெறுப்பை பரப்ப பயன்படுத்துவாக விமர்சித்துள்ளனர்.

Related News

Latest News