Saturday, July 12, 2025

இந்த நேரங்களில் தண்ணீர் குடித்தால்.. பல நன்மைகள் உடலில் ஏற்படும்…!

தண்ணீர் என்பது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது, தாகம் ஏற்பட்டால் தண்ணீர் பருக வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் சில அன்றாட வாழ்க்கை விஷயங்களை நாம் செய்வதற்கு முன்பு அல்லது பின்பு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அப்படி செய்வதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
எனவே தண்ணீர் எப்போது எல்லாம் கட்டாயம் குடிக்க வேண்டும் என்பதை குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

காலையில் தூங்கி எழுந்தவுடன் முதல் வேளையாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் காலையில் தண்ணீர் குடிப்பது கட்டாயம் தேவை என்று சொல்லப்படுகிறது. மூன்று வேளை சாப்பாட்டிற்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது அவசியம். ஏனென்றால் இது உணவுக் குழாய் பாதையில் தேங்கியுள்ள விஷயங்களை அகற்றுகிறது. இதனால் சாப்பிடும் போது தொண்டையில் சிக்கல் ஏற்படாது.

இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், இதனால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும், மேலும் தூங்கும் போது உடலை நீரோட்டமாக வைத்திருக்க உதவும். குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால், ரத்த அழுத்தம் குறையும், இதனால் திடீரென ஏற்படும் வலிப்பு போன்ற அபாயங்கள் வராது.

உடற்பயிற்சி செய்த பிறகோ அல்லது வியர்வை வரும் படி நாம் செய்யும் செயல்களுக்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆனால் தற்போது பலர் தண்ணீர் தாகம் எடுத்தும் கூட வேலை பளுவால் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான செயல். எனவே ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. மேலும் மேற்கண்ட விஷயங்கள் கடைப்பிடிப்பதால் கூடுதலான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news