Thursday, December 26, 2024

UPSC தேர்வில் பட்டைய கிளப்பிய 3 தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும், அரசு உயர்ப் பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளாக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அண்மையில் வெளியான 2022 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதி முடிவுகளில் தமிழகத்தில் இருந்து 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் மூன்று பேர்  தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் ஆவர். 169வது இடத்தை பிடித்துள்ள சத்ரியா கவின் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு செயலாளர் ஜகந்நாதனின் மகள் ஆவார். 290வது இடத்தை பிடித்துள்ள ஈசானி, தமிழ்நாடு அரசு தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மை செயலர் மற்றும் ஆணையர் அதுல் ஆனந்த் அவரின் மகள் ஆவார். 361வது இடத்தை பிடித்துள்ள அரவிந்த் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் ஆவார்.

இப்படி ஐஏஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் தேர்வுகளில் அசத்தி உள்ள நிலையில், முயற்சிக்கு தடை ஏதும் இல்லை என்பதற்கு UPSC தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஜீஜீயே சான்று. எலெக்ட்ரிஷியனின் மகளான ஜீஜீ அகில இந்திய அளவில் 107வது இடம் பிடித்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest news