‘கட்டு மல்லி கட்டி வச்சா’, ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே’ என சினிமா பாடல்கள் முதல் பெண்களின் தலை வரைக்கும் ஆக்கிரமித்து உள்ளது மல்லிகைப்பூ.
நல்ல வாசனை மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தலையில் சூடிக் கொள்வதை விடவும் மல்லிகை மலருக்கு பல மருத்துவ பயன்கள் உள்ளன. உடல் மிகவும் மெலிந்து சருமத்தில் வெள்ளைத் திட்டுகள் காணப்பட்டால் வயிற்றில் பூச்சிகள் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நான்கைந்து மல்லிகை பூக்களை தண்ணீரில் போட்டு கொதித்து, அந்த நீரை குடித்தால் வயிற்று பூச்சிகள் வெளியேறும். மல்லிகைப்பூவை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும் எனக் கூறப்படுகிறது.
ஓரிரெண்டு மல்லிகைப்பூக்களை தினமும் சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை உணர முடியும். சில மல்லிகைப்பூக்களை கசக்கி அந்த நீரை நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மல்லிகைப் பூவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடலின் பல உபாதைகளுக்கு தீர்வாக அமைகிறது.
காயங்களில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க மல்லிகைப்பூவை அரைத்து பற்று போடலாம். மன அழுத்தம் மற்றும் உடல் சூட்டினால் பாதிக்கப்படும் பெண்கள், மல்லிகைப்பூவை தலையில் வைத்துக் கொள்வதாலேயே நிம்மதியான உணர்வை பெற முடியும். வயிற்றுப்பூச்சிகள் மட்டுமில்லாமல் வாய்ப்புண் பிரச்சினை இருப்பவர்களும் மல்லிகைப்பூ காய்ச்சிய நீரை குடித்தால் நிவாரணம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.