Friday, December 27, 2024

ஷவரில் குளித்துக் கொண்டே ஃபுட் ரீவ்யூ செய்யும் நபரைக் காசு கொடுத்துப் பார்க்கும் மக்கள்…

உலகத்தில் பல வினோதமான நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது, மக்களை கவருவதற்கு சிலர் புது முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், அதுபோல நபர் ஒருவர் ஷவரில் குளித்துக் கொண்டே உணவுகளை சாப்பிட்டு ஃபுட் ரிவ்யூ செய்யும் வழக்கத்தைக் கொண்டு இருக்கிறார்.

காஸ் (Gaz) என்ற அமெரிக்கர் சான்விஜ், பிரெட் ஆம்லேட், ஸ்டீக், பீட்சா போன்ற சுவையான உணவுகளைக் குளிக்கும் போது சாப்பிடு வருகிறார், இப்படி செய்வதால் அவருக்கு நேரம் மிச்சமாவதோடு, இவரின் வீடியோவிற்கு வியூஸ் அதிகம் கிடைப்பதாகக் கூறியுள்ளார், தனக்கு வேலை அதிகம் இருக்கும் சமயத்தில் பலமுறை இவரால் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

முதலில் மாட்டு இறைச்சியில் செய்யப்பட்ட ஸ்டீக் என்னும் உணவு வகையை அவர் ஷவரில் குளித்து கொண்டே சாப்பிட்டுள்ளார், இந்த வீடியோ 1.1 மில்லியன் வியூசை வழங்கியது, இதனால் இவரின் புது முயற்சி வைரலானது. அதுபோல இவர் வேறு உணவுகளைக் குளித்துக் கொண்டே ரிவ்யூ செய்வதற்கு மக்கள் இவருக்குப் பணம் அனுப்புகிறார்கள். 

இது குறித்துப் பேசிய காஸ், இந்த செயல் மிகவும் நகைச்சுவையாக மக்களுக்குத் தெரியும், முதலில் எனது நண்பர்களுக்கு தான், இந்த வீடியோவை அனுப்பினேன், அப்போது அவர்கள் இது உச்சக்கட்ட நகைச்சுவையாக உள்ளது, இதனைப் பலரும் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள், எனவே நான் டிவிட்டரில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தேன், மேலும் பலர் எனக்குப் பணத்தை அனுப்பி வேறு புது உணவுகளை சாப்பிட்டு காட்டுங்கள் என்று கூறி வருகிறார்கள். இதனால் கடல் உணவுகளை நான் குளித்துக் கொண்டே சாப்பிடுவதற்கு முயற்சி செய்யப்போகிறேன், ஆனால் கடலுணவுகளின் வாசம் ஷாம்பூ மற்றும் ஸ்சோப் வாசத்திற்கு ஒத்துப் போகாது என்றார். மேலும் பல் உணவுகளை சாப்பிடபோவதாக கூறினார்.       

Latest news