Saturday, August 2, 2025
HTML tutorial

காய்ச்சலுக்கு இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க! மருத்துவ சங்கம் எச்சரிக்கை

குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் காய்ச்சல், சளி மற்றும் ஜலதோஷத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த சூழலை முன்னிட்டு IMA என அழைக்கப்படும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், தற்போது நாட்டில் H3N2 வைரஸால் ஏற்படும் காய்ச்சலே பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சலில் ஐந்து முதல் ஏழு நாட்களில் காய்ச்சல் சரியானாலும் மூன்று வாரங்கள் வரை இருமல் தொல்லை தொடரும் வாய்ப்புகள் அதிகம்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் பதினைந்து வயதுக்கு கீழானவர்களையும் இந்த வைரஸ் எளிதில் தாக்குகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் சிறுநீரகத் தொற்றுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய Antibiotic மருந்துகள் காய்ச்சலுக்கு அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

வைரஸ் காய்ச்சலை சரிசெய்வதில் பயன் தராத antibiotic மருந்துகள், antibiotic resistanceஐ ஏற்படுத்துவதால் antibiotic மருந்து தேவைப்படும் தொற்று தாக்கும் போது, உடல் மருந்தை ஏற்காமல் போகும் நிலை ஏற்பட்டு இக்கட்டான சூழல் உருவாகும்.

கோவிட் காலத்திலும் இதே தவறு செய்யப்பட்டதாக கூறியுள்ள மருத்துவ சங்கம் கூட்டமான இடங்களை தவிர்ப்பது, கைகளை சுத்தமாக கழுவுவது மற்றும் தேவைப்பட்டால் மாஸ்க் அணிவதே சிறப்பான பலன்களை தரும் என அறிவுறுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News