பிப்ரவரி மாதமே வெயில் கொளுத்த தொடங்கி பலரும் உடல் உஷ்ணமடைதல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
உடல் வெப்பத்தை தனித்து ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கேப்பை கூழின் பயன்களை தெரிந்து கொள்வோம்.
உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், கால்சியம் மற்றும் இரும்பு சத்து கேப்பை கூழில் இருக்கிறது.
பற்களும் எலும்புகளும் வலுவாகவும் உறுதியாகவும் இருக்க கால்சியம் முக்கிய பங்களிக்கும் நிலையில், மோருடன் சேர்த்து சாப்பிடும் கூழ் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை அளிக்கிறது. கொலெஸ்ட்ராலை மட்டுப்படுத்தும் கேப்பை, சக்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. இதயநோய் பாதிப்பின் வாய்ப்புகளை குறைப்பதோடு மைக்ரைன் தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது கேழ்வரகு.
தூக்கமின்மையை ஒழித்து கட்டும் கேப்பைக்கு மன உளைச்சல், பதட்டம் மற்றும் மனசோர்வை சரி செய்யும் ஆற்றலும் உள்ளது. இரத்த சோகை உள்ளவர்களுக்கு ஊட்டம் தரும் கேழ்வரகை கூழாக மட்டுமில்லாமல் தோசை, அடை, கஞ்சி என வித விதமாக செய்து சாப்பிட்டு அதனுள் இருக்கும் அபாரமான சத்துக்களை பெற்றுக்கொள்ளலாம்.