Tuesday, January 13, 2026

ஏஜென்ட் அண்ணாச்சியாக மாறும் லெஜண்ட் சரவணன்? வைரலாகும் வீடியோ

ரிலீஸ் தேதியை அறிவித்த பின் மற்ற அறிவிப்புகளை ‘லியோ’ படக்குழுவே நிறுத்தி வைத்திருந்தாலும், லியோ படக்குழுவை பற்றிய புதிய தகவல்கள் வந்து கொண்டு தான் உள்ளன.

படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், ‘லெஜண்ட்’ படத்தின் மூலம் பிரபலமான லெஜண்ட் சரவணன், Legend in Kashmir என குறிப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்த பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.

இதையடுத்து, லெஜண்ட் சரவணன் ‘லியோ’ படத்தில் இணைந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Related News

Latest News