Thursday, December 26, 2024

வயசானவங்க கீழ விழுறது ஏன்? அதை தடுக்க இந்த ஒரே ஒரு Excercise போதும்

பொதுவாக வயதானவர்கள் ஒரு முறை கீழே விழுந்து விட்டால் அதற்குப்பின் வித விதமான நோய்களும் தொடர்ந்து ஆரோக்கியத்துக்கு பெரும் பின்னடைவான சூழலை ஏற்படுத்துவதை பார்த்திருப்போம்.

ஆனால், அப்படி விழுவதற்கு உடலில் சமநிலை குறைவதே காரணம் என பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நடக்கும் போது, காலை தேய்த்து கொண்டே நடப்பதால் weight shifting நிகழ முடியாமல் தசைகள் மெல்ல வலுவிழக்கிறது. தசைகட்டுப்பாட்டை மேம்படுத்தி உடலின் சமநிலையை அதிகரிக்க ஒற்றைக்காலில் நிற்கும் பயிற்சியே தலை சிறந்ததாக பார்க்கப்படுகிறது.

20 நொடிகளுக்கு எதையும் பிடிக்காமல் நிற்க முடிந்தால் உடல் தகுதி நல்ல முறையில் இருக்கிறது என அர்த்தம். அவ்வாறு இல்லாத பட்சத்தில், Physiotherapy நிபுணர்களின் ஆலோசனை பெற்று தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதால் சிறப்பான சமநிலையை அடைய முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கீழே விழுவது உள்ளிட்ட பல சிக்கல்கள் தவிர்க்கப்படும். அமெரிக்காவை சேர்ந்த வயதானவர்களின் உடல் திறனை மேம்படுத்தும் Neurolastic Institute என்ற அமைப்பு ஒற்றைக் காலில் நிற்கும் பயிற்சியின் பயன்களை வீடியோவாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest news