Sunday, December 21, 2025

‘வாத்தி’ படத்தில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் SURPRISE!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி மற்றும் பல நடிகர்கள் இணைந்துள்ள வாத்தி படம், பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

‘லியோ’ படத்தை தயாரிக்கும் Seven Screen Studios நிறுவனமே தமிழில் ‘வாத்தி’ படத்தை வெளியிட இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

‘லியோ’ டைட்டில் ப்ரோமோ வீடியோ சென்சார் செய்யப்பட்டுவிட்டதாகவும், ‘வாத்தி’ படத்தின் போது, இந்த வீடியோ, தியேட்டர்களில் திரையிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

‘லியோ’ படத்திற்கு விளம்பரமாக இருக்கும் அதே நேரத்தில், ‘வாத்தி’ படத்திற்கும் விஜய் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ள Seven Screen Studiosஇன் இந்த யுக்தி, இரு படங்களுக்கும் சாதகமாக விளங்கும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related News

Latest News