Monday, May 12, 2025

ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட அனிருத்! பட்டய கிளப்பும் ‘லியோ’   

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியானதில் இருந்து படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளும் யூகங்களும் அதிகரித்து வருகின்றது.

ஆழமான கணிப்புகளும், நகைச்சுவையான மீம்ஸ்களும் இணையத்தை ஆக்கிரமித்து வர, ப்ரோமோ வீடியோவில் இடம்பெற்ற ‘லியோ’ bloody sweet பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதை தனிப் பாடலாக வெளியிடுமாறு, படத்தின் இசையமைப்பாளரான அனிருத்திடம் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், லியோ பாடல் உருவான வீடியோவை அனிருத் தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். என்ன energy, வேற லெவலா இருக்கே என ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வர வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest news